நந்தன குணதிலக்கவின் மரணத்தில் வலுத்துள்ள சந்தேகம்!
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த முன்னாள் அமைச்சர் நந்தன குணதிலக்கவின் மரணம் சந்தேகத்திற்குரியது என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
உறவினர்கள் எழுப்பிய சந்தேகத்தின் பேரில், திட்டமிடப்பட்டிருந்த இறுதிச் சடங்குகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இறுதிச் சடங்கு
அதன்படி, முன்னர் திட்டமிட்டபடி முன்னாள் அமைச்சரின் உடலை தகனம் செய்வதற்குப் பதிலாக அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் நந்தன குணதிலக்கவின் மரணம் தொடர்பான சந்தேகங்கள் காரணமாக, எதிர்காலத்தில் உடலை தோண்டி எடுத்து விசாரணை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கருத்தில் கொண்டு உறவினர்கள் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவும் நந்தன குணதிலக்கவின் மரணம் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டு தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |