குருநாகலில் முச்சக்கரவண்டி மீது மோதிய தனியார் பேருந்து: ஒருவர் பலி
குருநாகலில் தனியார் பேருந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
குறித்த விபத்து நேற்று (18-02-2026) குருநாகல், நாரம்மலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் சிக்கி முச்சக்கரவண்டியின் சாரதியான வாரியப்பொலை பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.
பேருந்தின் சாரதி
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நாரம்மலை பிரதான வீதியில் பயணித்த குறித்த தனியார் பேருந்தும் எதிரே வந்த முச்சக்கரவண்டியும் எதிர்பாராத விதமாக மோதியதில் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது.
இதையடுத்து, விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதியை அப்பகுதி மக்கள் மீட்டுச் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த நாரம்மலை காவல்துறையினர், தனியார் பேருந்தின் சாரதியைக் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |