கட்டுநாயக்கவில் சட்டவிரோத போதைப்பொருளுடன் இரு வெளிநாட்டவர் கைது
5 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களை நாட்டுக்குள் கடத்தி வந்த வெளிநாட்டு விமானப் பயணிகள் இருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் விமான நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள “பசுமைப் பாதை” ஊடாக வெளியேற முயன்றபோது, சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 23 மற்றும் 39 வயதுடைய தாய்லாந்து பிரஜைகள் எனவும், அவர்கள் தாய்லாந்தில் உள்ள இறைச்சிக் கடை ஒன்றில் இறைச்சி வெட்டுபவர்களாக பணியாற்றி வருவதாகவும் தெரியவந்துள்ளனர்.
“குஷ்” போதைப்பொருள்
சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த பெறுமதி 5 கோடியே 13 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளை சோதனையிட்டபோது, வைட்டமின்கள் அடங்கியதாகக் குறிப்பிடப்பட்ட 16 கொள்கலன்களுக்குள் 4 கிலோ 496 கிராம் “குஷ்” போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், 641 கிராம் “ஹஷீஷ்” போதைப்பொருள், வெளிப்புறத்தில் திராட்சைப் பாகு போன்று தோற்றமளிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டு, பொலித்தீன் மூலம் சுற்றப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23