மோடி பிரதமராக பதவியேற்கும் திகதி மாற்றம்: வெளியான உத்தியோகபூர்வ அறிவிப்பு
இந்தியாவின் (India) பிரதமராக நரேந்திர மோடி (Narendra Modi )எதிர்வரும் 9ஆம் திகதியன்று சத்தியபிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளதாக பாரதீய ஜனதாக்கட்சி இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி (Varanasi) தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் பிரதமர் மோடி 3வது முறையாக, 6,12,970 வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களின் சந்திப்பை தொடர்ந்து நரேந்திர மோடியின் தலைமையில் புதிய ஆட்சி அமைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தொடங்கியுள்ளன.
பதவி ஏற்பு விழா
டெல்லியில் (Delhi) நரேந்திர மோடி வரும் 9ம் தேதி மாலை 6 மணிக்கு மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்கவுள்ளார்.
ஏற்கனவே வரும் 8ம் திகதி மோடி பிரதமர் பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பதவி ஏற்பு விழா 9ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |