விண்வெளியின் மர்ம விருந்தாளி : A11pl3Z-இன் ஆச்சரிய பயணம்!
வானியலாளர்கள் சூரிய குடும்பத்தினுடாக விண்மீன்களுக்கு இடையில் ஒரு பொருள் வேகமாக பயணிப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
A11pl3Z இப்போது 3I/ATLAS என அழைக்கப்படும் இந்த மர்மப் பொருள், நமது சூரிய மண்டலத்தின் வழியாக பயணிக்கும் மூன்றாவது இடைநட்சத்திர பொருளாக (interstellar object) கண்டறியப்பட்டுள்ளது.
இது முதலில் 2017-இல் கண்டறியப்பட்ட ‘Oumuamua மற்றும் 2019-இல் கண்டறியப்பட்ட Borisov ஆகியவற்றைத் தொடர்ந்து மற்றொரு அண்டவெளி பயணி ஆகும்.
முக்கியமான தகவல்
இந்த வால்மீன் போன்ற பொருள் தற்போது வியாழன் கிரகத்தைக் கடந்து செல்கிறது என்று Nature இதழில் வெளியான செய்தி தெரிவிக்கிறது.
உலகெங்கிலும் உள்ள தொலைநோக்கிகள் இதனைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன, ஏனெனில் இது விரைவில் நமது புலப்படுத்தலில் இருந்து மறைந்துவிடும்.
இந்தப் பொருள் மற்றொரு நட்சத்திர மண்டலத்திலிருந்து வந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர், மேலும் இதன் பயணப் பாதை மற்றும் பண்புகள் விண்வெளி ஆய்வுக்கு முக்கியமான தகவல்களை வழங்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
