வரலாற்று சாதனை படைத்தது நாசா
செவ்வாய்க்கிரகத்தில், “இன்ஜெனியூனிட்டி” ஹெலிகொப்டர் வெற்றிகரமாகப் பறந்ததாக நாசா அறிவித்துள்ளது. இதன்மூலம் பூமியைத் தவிர மற்றொரு கிரகத்தில், முதன்முதலாக ஹெலிகொப்டரை இயக்கி நாசா வரலாற்று சாதனை படைத்துள்ளது.
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கடந்த ஆண்டு பெர்சவரன்ஸ் ரோவரை அனுப்பியது. பெர்சவரன்ஸ் ரோவருடன் சிறிய அளவிலான ஹெலிகொப்டர் ஒன்றும் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது.
இன்ஜெனியூனிட்டி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஹெலிகொப்டர் மூலம் செவ்வாய்க்கிரகத்தின் மேற்பரப்பில் நாசா ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.
இந்த இன்ஜெனியூனிட்டி ஹெலிகொப்டரை கடந்த 11-ம் திகதி செவ்வாய் கிரகத்தில் பறக்கவிட நாசா திட்டமிட்டிருந்தது.
ஆனால் மென்பொருள் தொடர்பான பிரச்சினையால், திட்டம் தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நிலையில் செவ்வாய்க்கிரகத்தில், “இன்ஜெனியூனிட்டி” ஹெலிகொப்டர் வெற்றிகரமாகப் பறந்ததாக நாசா அறிவித்துள்ளது.