நாடு முழுவதும் ஏற்பட்ட மின்வெட்டு - விடுக்கப்பட்ட கோரிக்கை
பெப்ரவரி 9 அன்று நாடு முழுவதும் ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பாக விசாரணை ஆரம்பமாகி உள்ளது.
குறித்த விசாரணையானது பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் (PUBLIC UTILITIES COMMISSION) முன்னெடுக்கப்பட உள்ளது.
இன்று (05) காலை 8:30 முதல் மாலை 6:00 மணி வரை பண்டாரநாயக்க நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இவ்விசாரணை நடைபெறும்.
சமூக - பொருளாதார தாக்கங்கள்
மின்வெட்டின் விளைவாக, மின்மாற்ற உரிமதாரர் 5.5 ஜிகாவாட் மணிநேர மின் தேவையையும், பின்னர் 4.6 ஜிகாவாட் மணிநேர மின் தேவையையும் வழங்க இயலவில்லை, இதனால் விநியோக உரிமதாரர்களுக்கு இழப்புகள் ஏற்பட்டன.
இது பொதுமக்கள், பொருளாதாரம் மற்றும் நுகர்வோருக்கு கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தியது.
2002 ஆம் ஆண்டு 35 ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணையச் சட்டத்தின் பிரிவு 18 இன் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விசாரணை நடைபெற உள்ளது.
மேலதிக தகவல்கள்
விசாரணையின் மூலம் மின்வெட்டின் சமூக - பொருளாதார தாக்கங்களை ஆராய்ந்து, எதிர்காலத்தில் இதுபோன்ற மின்வெட்டுகளைத் தடுக்க பரிந்துரைகளை அடையாளம் காண ஆணையம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
[DWMOUJ ]
மேலதிக தகவல்கள் அல்லது விளக்கங்களை 077-2943193 என்ற எண்ணில் தொடர்பு கொள்வதன் மூலமோ அல்லது consultation@pucsl.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரை அணுகுவதன் மூலமாகவோ பெற்றுக் கொள்ளலாம்.
சூரிய மின்கலங்கள் மூலம் தேசிய மின் கட்டமைப்புக்கு வழங்கப்படும் அதிகளவிலான மின்சாரமே தேசிய மின் கட்டமைப்பு நிலைத்தன்மை குறைவதற்கு வழிவகுத்து மின்தடை ஏற்பட்டதாக மின்சார சபை தெரிவித்திருந்தது.
இதேவேளை குறித்த மின்தடைக்கு குரங்கே காரணம் என மின்துறைக்கான அமைச்சர் முன்னர் கூறியிருந்தது குறிப்பிடத்தது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
