சிறிலங்காவில் தொடர்ந்து குறையும் தேசிய பணவீக்கம்
சிறிலங்காவின் தேசிய பணவீக்கம் இந்த வருடம் ஜூன் மாதமளவில் குறைவடைந்துள்ளது.
நாடு பூராகவும் நுகர்வோர் பொருட்கள் மற்றும் சேவைகளுக்காக செலுத்தும் விலைகளின் அதிகரிப்பை அளவிடும் அளவீடாக தேசிய பணவீக்கம் காணப்படுகிறது.
தற்போது இது நுகர்வோருக்கான விலைகளைக் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைக்குக் கொண்டு வந்துள்ளது.
தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டால் அளவிடப்பட்ட விலைகளில் மாற்றம் ஜூன் 2023 வரையிலான பன்னிரெண்டு மாதங்களில் 22.1% உயர்ந்து இருந்தது.
இது ஒரு மாதத்திற்கு முன்பு இருந்த 22.1% சதவீதத்திலிருந்து 10.8% ஆக கணிசமாகக் குறைந்துள்ளது, 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 8.3% ஆக இருந்ததைத் தொடர்ந்து இதுவே அடுத்த குறைந்தளவு வீதம் என்பது குறிப்பிடத்தக்கதொன்றாகும்.
மாதாந்த விலை வீழ்ச்சி விலை நிர்ணயங்களுக்கு உதவி
இதற்கிடையில், ஜூன் மாதத்தில் விலைகள் மே மாதத்தை விட 0.1% அதிகரித்தன, இது ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் காணப்பட்ட 0.2% அதிகரிப்பினை விடக் குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மாதாந்தம் இவ்வாறு விலைகளில் வீழ்ச்சி ஏற்படுவது பொருளாதாரத்தில் எதிர்கால விலை நிர்ணயங்களுக்குச் சாதகமான வளர்ச்சியாக உள்ளது, ஏனெனில் இது உண்மையில் விலை வீழ்ச்சியை சுட்டிக்காட்டுகிறது.
கொழும்பு விலைகளைப் பின்பற்றியே தேசிய நுகர்வோர் விலைகள் காணப்படுகின்றது, இதுவும் ஒரு மாதத்திற்கு முன்னர் இருந்த 25% ஆக இருந்து கடந்த ஜூன் மாதத்தில் 12 % பெரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதற்கிடையே ஜூலை மாதமளவில் கொழும்பு பணவீக்கம் 7.0% ஆக மேலும் குறையும் என்று மத்திய வங்கி எதிர்பார்த்துள்ளது.