ஒக்டோபர் 11 - 13 வரை தேசிய தகவல் தொழில்நுட்ப மற்றும் வர்த்தக முகாமைத்துவ வாரம்
நாட்டை டிஜிட்டல் மயமாக்கும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்தும் வகையில் முக்கிய வேலைத்திட்டமொன்று நடைபெறவுள்ளது.
அவ்வகையில், தேசிய தகவல் தொழில்நுட்ப மற்றும் வர்த்தக முகாமைத்துவ வாரத்தின் (National IT and BPM Week) ஆரம்ப நிகழ்வு 2023 ஒக்டோபர் 11,12 மற்றும் 13 ஆம் திகதிகளில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகச் சந்திப்பு இன்று (22) அதிபர் ஊடக மையத்தில் நடைபெற்றதோடு, தொழில்நுட்ப அமைச்சின் பணிப்பாளர் (அபிவிருத்தி) ஜனக சம்பத் கீகியனகே, தேசிய எதிர்காலத்துக்கான திறன் வலுவூட்டல் நிறுவனத்தின் தலைவர் மது ரத்நாயக்க, மென்பொருள் சேவை நிறுவனம் மற்றும் இலங்கை கூட்டு நிறுவனம் (SLASSCOM) தலைவர் ஜெஹான் பேரின்பநாயகம் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தனர்.
வேலைத்திட்டத்தின் நோக்கம்
இவ்வேலைத்திட்டத்தி் ஊடாக, தகவல் தொழில்நுட்ப தொழில் முயற்சிகளை ஊக்குவித்தலுக்காக புதிய தொழில்நுட்பம் தொடர்பில் அறிவை பெற்றுக்கொடுத்தல். திறன் விருத்தி, தொழில் ஆலோசனைகள் மற்றும் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் மேல் மாகாணத்தில் (சாதாரண தர மற்றும் உயர்தர) பாடசாலை மாணவர்கள், அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்பயிற்சி கல்லூரி மாணவர்கள், தொழில் தேடுவோர், தொழில் முனைவோருக்கான தெளிவூட்டல்கள் வழங்கப்படவுள்ளன.
மூன்று தினங்களாக நடைபெறும் குறித்த வேலைத்திட்டத்தின் போது தொழிற்சாலைகள் மற்றும் தொழில் ஆலோசனை நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக செயற்பாடுகளுக்கு வரையறுக்கப்பட்ட தொழில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கான களம் அமைத்துக்கொடுக்கப்படுவதோடு, தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தினால் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக செயற்பாடுகள் குறித்த செயலமர்வொன்றும் நடத்தப்படவுள்ளது.
இலங்கை தகவல் தொழில்நுட்ப மற்றும் வர்த்தக செயற்பாடுகள் முகாமைத்துவ தொழிற்துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சியுடன் தொடர்ச்சியாக முன்னோக்கிச் செல்வதோடு, 2022 ஆம் ஆண்டில் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
அதனை 5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துக்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது. 144,000 அதிகமான தொழிலாளர்களுக்கு தொழில் பெற்றுக்கொடுத்து இலங்கை பொருளாதாரத்தில் சிறப்பான வகிபாகத்தை கொண்டுள்ள தகவல் தொழில்நுட்ப மற்றும் வர்த்த முகாமைத்துவ பிரிவு இந்நாட்டின் மொத்த தேசிய உற்பத்திக்கும் குறிப்பிடத்தக்க அளவான பங்களிப்பை வழங்குகிறது.
உலகளாவிய ரீதியில் தற்போதும் டிஜிட்டல் மயமாக்கல், தானியக்க, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்ப பாவனைகள் உயர்வடைந்து வருகின்றன.
அதனுடன் இணைந்து எதிர்பார்க்கப்படும் திறன் விருத்தியை பெற்றுக்கொள்ள வேண்டும்.
அதேபோல், இத்துறையின் தொழிற்படையை 200,000 ஆக அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் நாட்டின் மொத்த தேசிய உற்பத்திக்கு 15% பங்களிப்பை பெற்றுக்கொள்ளவும் இலங்கையை உலக பொருளாதார சுட்டியில் கேந்திர நிலையமாக நிலைநிறுத்தி வளமான தேசத்தை கட்டியெழுப்பவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய தொழில்நுட்ப அமைச்சர் கனக ஹேரத்தின் வழிகாட்டலின் கீழ் தொழில்நுட்ப அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு, இலங்கை ஏற்றுமதி ஊக்குவிப்புச் சபை, இலங்கை மென்பொருள் சேவை சங்கம் மற்றும் கூட்டு நிறுவனங்கள் (SLASSCOM), இலங்கை கனிணிச் சங்கம், தகவல் தொழில்நுட்ப தொழிற்சாலை சங்கம்(FITIS), இலங்கை தகவல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் (ICTA) மற்றும் ஏனைய தொழில்நுட்ப நிறுவனங்களினால் இந்த வேலைத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 2 மணி நேரம் முன்
