விருப்புவாக்கின் அடிப்படையில் வெற்றி! தேசிய மக்கள் சக்தி
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் விருப்புவாக்கின் அடிப்படையிலேயே வெற்றபெற்றவர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள் எனவும் மக்கள் சந்தேகம் கொள்ளத்தேவையில்லை என்றும் தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் வவுனியாவில் தமது வேட்பு மனுவினை தாக்கல் செய்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தல்
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், “அனைத்து இனங்களையும் உள்ளடக்கிய சக்திமிக்க வேட்பாளர் அணி வன்னியில் களம் காண்கின்றது.
அந்தவகையில் ஜனாதிபதியின் வழிகாட்டலில் ஊழல் மோசடி ஏனைய துஸ்பிரயோகங்கள் அற்ற நேர்மையான ஆட்சியினை அமைப்பதற்கு நாங்கள் ஒன்று திரண்டுள்ளோம்.
மக்களின் ஆணைக்காக நாங்கள் காத்திருக்கின்றோம். மக்கள் ஆணையை பெற்று சமாதானமாக நின்மதியாக வாழக்கூடிய ஒரு தேசத்தினை கட்டி எழுப்புவோம்.
இதேவேளை, ஊழல் மோசடி பேர்வழிகளை நிராகரிக்க வேண்டும் என்று மக்களிடம் அன்பாக கேட்டுக்கொள்கின்றோம்.
போலி பிரசாரங்கள்
இன்று ஜனாதிபதியின் பெயரை கூறி பல சுயேட்சைகுழுக்கள் போட்டியிடுவதாக போலி பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றது.
அவரது கையை வலுப்படுத்தும் ஒரே கட்சி தேசியமக்கள் சக்தி என்பதை கூறிக்கொள்கின்றேன். அவ்வாறானவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும்.
அத்துடன் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் தேசியமக்கள் சக்தியில் விருப்பு வாக்கு முறைமை பார்க்கப்படாது என்று கூறுவது போலியான ஒரு கருத்துருவாக்கமே.
இம்முறை விருப்பு வாக்கின் அடிப்படையில் தான் வேட்பாளர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள்.
மக்கள் அது தொடர்பாக எவ்வித சந்தேகமும் அடையத்தேவையில்லை.
நிச்சயமாக கூடுதலான
விருப்பு வாக்கினை பெறுகின்ற வேட்பாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு
அவர்களே நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படுவார்கள்” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |