கனடாவில் அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்கள் : எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை
கனடாவில் (Canada) கார் திருட்டை தடுப்பதற்கு தேசிய திட்டமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாடு தழுவிய ரீதியில் வாகனத் திருட்டுச் சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துள்ள நிலையில் கார் திருட்டை தடுப்பதற்காக அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், காவல்துறை பிரிவுகளுக்கு இடையில் தகவல்களை பரிமாறிக் கொள்ளல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் வாகனத் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருடப்பட்ட வாகனங்கள்
அத்தோடு, திருடப்பட்ட வாகனங்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதனை தடுக்க விசேட சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் குறிப்பாக கொள்கலன்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாகன திருட்டை கட்படுத்தும் நோக்கில் தேசிய மாநாடு ஒன்றையும் அரசாங்கம் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |