தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றம் குறித்து வெளியான அறிவிப்பு
தேசிய பாடசாலை ஆசிரியர்களின் 2026ஆம் ஆண்டுக்கான இடமாற்றம் தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
அதன்படி, குறித்த ஆசிரியர்களின் வருடாந்த மற்றும் கட்டாய இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் இணையவழி ஊடாக கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, தேசிய பாடசாலை ஆசிரியர்கள் 2026 ஜூலை 16 ஆம் திகதி முதல் ஜூலை 30 ஆம் திகதி வரை http://nstt.moe.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக இணையவழியில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரச்சினை என்றால் வெறியேறு! அர்ச்சுனாவின் கருத்தால் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஆவேசமடைந்த பிரதிநிதிகள்!
பாடசாலை அதிபரிடம் ஒப்படைத்தல்
மேலும் இணையவழியில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் அச்சிடப்பட்ட பிரதியை 2026 ஜூலை 31ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னரோ தாங்கள் சம்பளம் பெறும் பாடசாலையின் அதிபரிடம் ஒப்படைப்பது கட்டாயமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஆசிரியர்களால் தனிப்பட்ட முறையில் கொண்டுவரப்படும் அல்லது தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் எந்தவொரு விண்ணப்பமும் அமைச்சினால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |