அரை சொகுசு பேருந்துகளை நீக்குவதற்கு தீர்மானம்! - போக்குவரத்து ஆணைக்குழு

Sri Lanka Sri Lankan Peoples Transport Fares In Sri Lanka
By Dharu Mar 18, 2023 10:51 AM GMT
Report

தற்போது சேவையில் ஈடுபட்டுவரும் அரை சொகுசு பேருந்து பிரிவிலுள்ள பேருந்துகள் எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டின் பின் குறித்த பிரிவில் இருந்து இரத்து செய்யப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சாதாரண கட்டணத்தில் இயங்கும் பேருந்துகளுக்கும், அரை சொகுசு பேருந்துகளுக்கும் வித்தியாசம் இல்லை என்பதை அவதானித்த பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சஷி வெல்கம தெரிவித்துள்ளார்.

"இலங்கையில் பொது போக்குவரத்து சேவை பேருந்துகள் சாதாரண, அரை சொகுசு மற்றும் சொகுசு வகைகளின் கீழ் இயங்குகின்றன.

அதிக பயணிகள்

அரை சொகுசு பேருந்துகளை நீக்குவதற்கு தீர்மானம்! - போக்குவரத்து ஆணைக்குழு | National Transport Commission Bus Owners Sri Lanka

அரை சொகுசு பேருந்துகளில் சாதாரண கட்டணத்தை விட அரைப்பங்கு அதிக கட்டணமும், சொகுசு பேருந்துகளில் சாதாரண பேருந்து கட்டணத்தை விட இருமடங்கு கட்டணமும் அறவிடப்படுகிறது.

அரை சொகுசு பேருந்துகளில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மட்டுமே பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும்.

அப்படி இருந்தும், அரை சொகுசு வகைகளின் கீழ் இயங்கும் தனியார் பேருந்துகள், பேருந்தில் உள்ள இருக்கைகளின் எண்ணிக்கையை விட இரண்டு முதல் மூன்று மடங்கு அதிக பயணிகளை ஏற்றிச் செல்வதை அவதானிக்க முடிகிறது." என தெரிவித்தார்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள்

அரை சொகுசு பேருந்துகளை நீக்குவதற்கு தீர்மானம்! - போக்குவரத்து ஆணைக்குழு | National Transport Commission Bus Owners Sri Lanka

இது தொடர்பாக நடத்தப்பட்ட கலந்துரையாடலில், “பயணிகளுக்கு பயனளிக்காத அரை சொகுசு சேவையை இரத்து செய்ய வேண்டும் என்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

அத்துடன், தற்போது அரை சொகுசுப் பேருந்துகளாக இயங்கும் பேருந்துகளை குளிரூட்டப்பட்ட பேருந்துகளாக அல்லது வழக்கமான சேவைகளாக மாற்றுமாறு பேருந்து சங்கங்களுக்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபையினால் இயக்கப்படும் 4,300 பேருந்துகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் நீண்ட தூர சேவைப் பேருந்துகளாகும்.

இவற்றில் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் மட்டுமே அரை சொகுசு சேவைகளாக இயக்கப்பட்டன. அந்தப் பேருந்துகளும் அந்தப் பிரிவில் இருந்து அகற்றப்படும்.” என இலங்கை பயணச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் (செயல்பாடுகள்) பண்டுக ஸ்வரனஹன்ச தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016