தேசிய வெசாக் விழா தொடர்பில் அரசாங்கத்தின் புதிய தீர்மானம்!
இந்த ஆண்டிற்கான அரச வெசாக் விழாவை எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடங்களின் மகாநாயக்க தேரர்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காக அமைச்சர் இன்று (24.01.2026) அவர்களைச் சந்தித்து ஆசி பெற்றார்.
கோரிக்கை
அதன்படி, மூன்று நிகாயக்களினதும் மகாநாயக்க தேரர்களின் கோரிக்கையைக் கருத்திற்கொண்டு, பௌர்ணமி குழுவின் பரிந்துரையின் பேரில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இதற்கு முன்னர் அரச வெசாக் விழா பிரகடனப்படுத்தப்பட்ட தினத்தை மாற்றக் கோரி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
அதன்படி, ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் போயா குழு கூடி மே 30 ஆம் திகதி அரச வெசாக் விழாவை நடத்த ஒப்புக்கொண்டதாக அமைச்சர் சந்தன அபேரத்ன மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |