இலங்கையை முடக்கிய குரங்கு - மின்வெட்டுக்கு ஆருடம் கூறும் அமைச்சர்: அதிர்ச்சியில் மக்கள்
நாட்டில் நேற்று ஏற்பட்ட திடீர் மின்வெட்டுக்கு காரணம் கடந்த கால அரசாங்கங்கள் தான் என அரச தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
நாடளாவிய ரீதியில் முன் அறிவித்தல் இன்றி நேற்று (09) முற்பகல் இரண்டு தடவைகள் திடீர் மின் வெட்டு ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் நாட்டில் ஏற்பட்ட மின்வெட்டு குறித்து பல்வேறு தரப்பினரும் அரசாங்கத்தை நோக்கி குற்றச்சாட்டுக்கள் முன்வைத்து வருகின்றனர்.
உயிரை மாய்த்த குரங்கு
அத்துடன் மின்வெட்டுக்கு காரணம் மின்பிறப்பாக்கியில் பாய்ந்து உயிரை மாய்த்த குரங்கு தான் என அரசாங்கம் தெரிவித்திருந்தமை மக்களால் சமூக வலைத்தளங்களில் கேலிச்சித்திரங்களாகவும் கடுமையான விமர்சனத்திற்கும் உள்ளாகி வருகிறது.
இந்நிலையில், நாடு முழுவதும் நேற்று (09) ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பான விரிவான தகவல்களை இலங்கை மின்சார சபை இன்ற (10) வெளியிடும் என்று அதன் தவிசாளர் திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சூழ்நிலையில், முன்னைய அரசாங்கங்களின் திட்டமிடல் இல்லாமையும் தொலைநோக்குப் பார்வையற்ற வேலைத்திட்டமும் மின் வெட்டுக்குக் காரணம் என என வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி (Kumara Jayakody) தெரிவித்துள்ளார்.
நிலைமைக்கு காரணம்
தேசிய மின்சார அமைப்பின் சமநிலையை பேணுவதற்கு கடந்த காலங்களில் எந்த திட்டமும் செயல்படுத் தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மின்சார அமைப்பின் ஸ்திரத்தன்மையை பராமரிப்பதில் கடந்த கால அரசாங்கங்கள் உரிய கவனம் செலுத்தவில்லை.
தொழில்நுட்பத்தைப் பற்றிய புரிதல் இல்லாத தவறான வழிகாட்டுதலும் இந்த நிலைமைக்குக் காரணம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலைமைக்கான காரணங்கள் முழுமையாக ஆராயப்பட்டு இது போன்ற நிலைமை மீண்டும் ஏற்படாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)