அதிகரிக்கும் மற்றுமொரு பதற்றம் : ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்திய நேட்டோ போர் விமானங்கள்
லாட்விய வான்வெளியில் இன்று(08)திங்களன்று நுழைந்த ஒரு வெளிநாட்டு ஆளில்லா விமானத்தை நேட்டோ போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டின் ஆயுதப் படைகள் அறிவித்தன.
அந்நாட்டின் தேசிய ஆயுதப் படைகள் ஒரு அறிக்கையில் இது தொடர்பாக தெரிவிக்கையில், "ரஷ்யாவின் மின்னணுப் போர் நடவடிக்கையின் விளைவாக, லாட்கேல் பிராந்தியத்தில் லாட்விய வான்வெளியில் நுழைந்த ஒரு வெளிநாட்டு ஆளில்லா விமானத்தை, போல்டிக் வான் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள நேட்டோ போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தின."
வான்வெளி தொடர்ந்து கண்காணிப்பு
"லாட்விய தேசிய ஆயுதப் படைகள், நேட்டோ கூட்டாளிகளுடன் இணைந்து, சாத்தியமான அச்சுறுத்தல்களுக்கு உடனடி பதிலடி கொடுக்கும் திறனை உறுதி செய்வதற்காக வான்வெளியைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன," என்றும் அது மேலும் கூறியது.

எல்லையில் இராணுவம் தனது வான் பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்தியதை ஆயுதப் படைகள் நினைவுபடுத்தின.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் தொடர்வதால், லாட்விய வான்வெளிக்குள் வெளிநாட்டு ஆளில்லா விமானங்கள் நுழைவது அல்லது நெருங்குவது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழக்கூடும் என்றும் அது எச்சரித்தது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 19 மணி நேரம் முன்