மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த போர் - ஈரான் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல்
மேற்கு மற்றும் மத்திய ஈரானில் உள்ள இராணுவ இலக்குகள் மீது தாம் தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
தெஹ்ரான், தப்ரிஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய நகரங்களில் வெடிப்பு சத்தங்கள் கேட்டுள்ளதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இஸ்பஹானில் உயிரிழப்புகள் எதுவும் இல்லை என உள்ளூர் அதிகாரிகள் கூறியதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் முழுவதும் சைரன்கள்
லெபனான் மீதான தாக்குதல்கள் மூலம் இஸ்ரேல் மீண்டும் மீண்டும் போர் நிறுத்தத்தை மீறுவதாகக் குற்றம் சாட்டி , நேற்றிரவு ஈரான் வடக்கு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசியதைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இதேவேளை மத்திய இஸ்ரேல் முழுவதும் சைரன்கள் ஒலிப்பதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் அதற்கு உடனடியாக எவ்வித தாக்குதல்களையும் நடத்த வேண்டாம் என இஸ்ரேல் பிரதமரிடம் அமெரிக்க ஜனாதிபதி கோரிக்கை விடுத்திருந்தார்.
எனினும் அதனையும் மீறி, இஸ்ரேல் தாக்குதலை நடத்தியுள்ளது. குறித்த தாக்குதல் காரணமாக தெஹ்ரான் விமான நிலையம் உடனடியாக மூட்ப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 18 மணி நேரம் முன்