உக்ரைனில் களமிறங்குமா நேட்டோ? புடினுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை
உக்ரைன் மீதான காட்டுமிராண்டித்தனமான போரில் ரஷ்யா ஒருபோதும் வெல்லவே முடியாது என்று நேட்டோ அமைப்பு தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருப்பதையொட்டி நேட்டோ அமைப்பின் துணைப்பொதுச்செயலாளர் மிர்சியா ஜியோனா, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில்,
உக்ரைன் மீதான காட்டுமிராண்டித்தனமான போரில் ரஷ்யா வெல்லவே முடியாது. உக்ரைன் மீது ரஷ்யா இரசாயன தாக்குதலோ, அணுசக்தி தாக்குதலோ நடத்தினால், நேட்டோ தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
நேட்டோ ஒரு தற்காப்பு கூட்டணி. அதே நேரத்தில், அது ஒரு அணுசக்தி கூட்டணி. அவர்கள் உக்ரைனுக்கு எதிராக இரசாயன ஆயுதங்கள் அல்லது பிற வகையிலான அதிநவீன ஆயுத அமைப்புகளை பயன்படுத்தினால், அது உக்ரைனுக்கு எதிராக புடின் நடத்தும் போரின் தன்மையை அடிப்படையில் மாற்றிவிடும்.
நேட்டோ பதில் அளிக்க தயாராக உள்ளது என்று நான் உத்தரவாதம் அளிக்க முடியும் என்று அவர் கூறினார்.
