காணி தகராறில் கடற்படை சிப்பாய் படுகொலை
மாத்தளை (Matale) - மஹாவெல, மில்லவன பிரதேசத்தில் காணி பிரச்சினையினால் ஏற்பட்ட மோதலில் கடற்படை சிப்பாய் ஒருவர் கொலை மஹாவெல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மோதலில் மில்லவன பஹல் கம பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான இந்திக பிரசாத் பண்டார என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், உயிரிழந்த நபர் பாலாவி முகாமில் கடமையாற்றிய இலங்கை கடற்படையின் சிப்பாய் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
காணி தகராறு
இந்த நிலையில், கொலையை செய்ததாக கூறப்படும் சந்தேகநபர், மஹாவெல காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இச்சம்பவத்தில் உயிரிழந்த கடற்படை சிப்பாய், தனது வீட்டுக்குச் சொந்தமான காணியின் வேலியை சரிசெய்து கொண்டிருந்த போது, காணியை ஒட்டியுள்ள மற்றைய காணியின் உரிமையாளருடன் ஏற்பட்ட தகராறில், முகம் மற்றும் கழுத்தில் கத்தியினால் தாக்கப்பட்டு உயிரிழந்து இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |