சர்வதேசக் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு' விருதை அர்ப்பணிகின்றேன்! நவநீதம் பிள்ளை நெகிழ்ச்சி
நோபல் அமைதிப் பரிசை வென்றதைத் தொடர்ந்து, தான் இன்னும் ஆச்சரியத்திலிருந்து மீளவில்லை எனவும், அதேவேளை மிகுந்த பெருமையும் நன்றியுணர்வும் கொண்டுள்ளதாகவும் நவி பிள்ளை தெரிவித்துள்ளார்.
தனக்குக் கிடைத்த இந்த விருதை சர்வதேசக் குற்றங்களால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், சர்வதேச நீதியை நிலைநாட்டுவதற்காகச் செயற்படுவோர் மற்றும் அதனைப் பாதுகாப்பவர்களுக்கும் அர்ப்பணிப்பதாக அவர் ஊடகவியலாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டுச் சட்டங்களைப் பலவீனப்படுத்தும் முயற்சிகள் குறித்து எச்சரித்த அவர், அவ்வாறான நடவடிக்கைகள் சட்டத்தின் ஆட்சிக்குப் பதிலாக அதிகாரமே யாருடைய துன்பங்கள் முக்கியமானவை என்பதைத் தீர்மானிக்கும் நிலைக்கு உலகை மீண்டும் இட்டுச் செல்லும் அபாயம் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ராஜபக்சக்களின் தமிழ்ப்புலிப் பெண் விளிப்பு நவிக்கு சமாதான நோபல் விருது! அவர்களின் குடும்ப பெண் சிராந்திக்கு..
சமமான கண்ணியம்
தாம் வகித்த பல்வேறு பதவிகளிலும் ஒவ்வொரு மனிதனினதும் சமமான கண்ணியத்தை மேம்படுத்திப் பாதுகாப்பதற்கான உறுதிப்பாட்டுடன் செயற்பட்டதாகவும், குறிப்பாகப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்தியதாகவும் நவி பிள்ளை தெரிவித்துள்ளார்.

சர்வதேச நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றைப் பாதுகாப்பதன் அவசியத்தைத் தனது கருத்துகள் மீண்டும் வலியுறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |