முதல் மூன்று மாதங்களுக்குள் 150 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது!
இலங்கைக் கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி கடற்தொழிலில் ஈடுபட்ட சுமார் 146 இந்திய கடற்தொழிலாளர்களையும், அவர்கள் பயன்படுத்திய 18 விசைப் படகுகளையும் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் கைப்பற்றியுள்ளதாக சிறிலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, நேற்று (16) இரவு கூட சிறிலங்கா கடற்படையினர் இரண்டு இந்திய இழுவை படகுகளை கைப்பற்றியதுடன், நெடுந்தீவில் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 21 இந்திய கடற்தொழிலாளர்களையும் கைது செய்துள்ளனர்.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடுவதைத் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை சிறிலங்கா கடற்படையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
விசாரணைக்கு உட்படுத்தி
இருப்பினும், இந்திய கடற்தொழிலாளர்களின் எல்லை தாண்டிய மீன்பிடி தொடர்ந்து இடம்பெற்ற வண்ணமே இருக்கின்றது.
ரோந்து நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களை விசாரணைக்கு உட்படுத்தி, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள போதிலும் இந்த எல்லை தாண்டிய கடற்தொழில் தொடர்ந்தவண்ணமே இருப்பதாக சிறிலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
ரோந்துப்பணிகள்
இவ்வாறு இந்திய கடற்தொழிலாளர்கள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடுவது உள்நாட்டு கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
இதனை தடுப்பதற்காகவும் இலங்கை கடற்பரப்பில் இடம்பெறும் குற்றச்செயல்களை தடுப்பதற்காகவும் சிறிலங்கா கடற்படையினர் தொடர்ந்தும், ரோந்துப்பணிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |