யாழ் கடற்பரப்பில் ஒன்பது பேரை கைது செய்த கடற்படை
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக இலை குழைகளை பயன்படுத்தி கணவாய் மீன் பிடிப்பதற்காக இலைகுளைகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட படகை வெற்றிலைக்கேணியில் கடற்படை கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு இரகசிய தகவலொன்று கிடைக்கப்பெற்றதையடுத்து நேற்று(13) புதன் கிழமை திடீர் சுற்றிவளைப்பொன்றை கடற்படையினர் முன்னெடுத்திருந்தனர்.
மேலதிக சட்ட நடவடிக்கை
இதன்போது, மருதங்கேணி கடற்பகுதியில் இருந்து சட்டவிரோதமாக இலை குழைகளை பயன்படுத்தி கணவாய் மீன் பிடிப்பதற்காக இலைகுளைகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட படகை வெற்றிலைக்கேணியில் கடற்படையினர் வழிமறித்து கைது செய்துள்ளனர்.
இதேவேளை மின் ஒளி பாய்ச்சி மீன்பிடித்த குற்றச்சாட்டிலும் கட்டைக்காடு கடற்பகுதியில் ஒருவர் நேற்று கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் கடற்படையினரால் அண்மை நாட்களாக பலர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஒன்பது சந்தேக நபர்களையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |