அஸ்வெசும விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கான இரண்டாம் கட்ட விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான காலக்கெடு மார்ச் மாதம் 22 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தற்போது இதற்காக 130,000 புதிய விண்ணப்பங்கள் கிடைக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கான இரண்டாம் கட்டத்துக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் (15) நிறைவடைவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
அஸ்வெசும விண்ணப்பங்கள்
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான இரண்டாம் கட்டத்துக்கான கொடுப்பனவுகள் எதிர்வரும் ஜுன் மாதம் முதல் வழங்கப்படும்.
இதேவேளை, அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் முதல் கட்டத்தின் போது போலியான தகவல்களை வழங்கி நன்மைகளைப் பெற்றுக் கொண்டவர்களிடம் இருந்து பணத்தை மீளப்பெறுவதற்கு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தாம் தயாராக இருப்பதாகவும் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மேன்முறையீடுகளை சமர்ப்பித்த சுமார் 10,000 பேர் நிவாரணம் பெற தகுதியற்றவர்களாக மாறியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |