ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகிய பிரபல வீரர்! வெளியான காரணம்
ஐபிஎல் 2024 இம்மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், டெல்லிகேப்பிடல்ஸ் அணியின் இளம் வீரர் ஹாரி ப்ரூக் விலகியுள்ளார்.
டெல்லிகேப்பிடல்ஸ் அணியை பொறுத்த வரையில், இந்த சீசனில் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் அணியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நேற்று முதல் டெல்லி பயிற்சி முகாமில் இணைந்த ரிஷப் பண்ட், தீவிர துடுப்பாட்ட பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
விலகிய பிரபல வீரர்
இந்நிலையில், இங்கிலாந்து இளம் வீரர் ஹாரி ப்ரூக் திடீரென ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் மற்றும் ஐபிஎல் தொடரில் இருந்து பின் வாங்கியது ஏன் என்பது குறித்து இளம் வீரர் ஹாரி ப்ரூக் நீண்ட விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
''ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டாம் என்ற கடினமான முடிவை எடுத்துள்ளேன். டெல்லி அணிக்காக ஏலத்தில் வாங்கப்பட்ட போது, இந்த சீசனில் விளையாட ஆர்வமாக இருந்தேன்.
பின் வாங்கியதற்கு காரணம்
ஆனால் சூழ்நிலை வேறு மாதிரி அமைந்துள்ளது. ஐபிஎல் தொடரில் இருந்து பின் வாங்கியதற்கு சொந்த காரணங்களை கூற வேண்டும் என்று நினைத்ததில்லை. கடந்த மாதம் எனது பாட்டி மறைந்துவிட்டார்.
சிறு வயதில் இருந்து எனது பாட்டியின் வீட்டில் வளர்ந்தவன், அவர் எப்போதும் எனக்கு ஒரு தூண் போல் நம்பிக்கை அளித்தவர். எனது கிரிக்கெட் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கும் அவரே முதன்மையான காரணம்.
பாட்டி வீட்டில் இருந்து போது அவர் இல்லாமல் ஒருநாளும் முழுமையடையாது. நான் இங்கிலாந்து அணிக்காக விளையாடுவதை அவர் நேரில் வந்து பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது.
டெல்லி அணி நிர்வாகம்
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க அபுதாபியில் இருந்து புறப்படும் போது தான் பாட்டியின் உடல்நிலை பாதிப்பு குறித்து தெரிவிக்கப்பட்டது.
இதனால் உடனடியாக நாடு திரும்ப முடிவு செய்தேன். தற்போது எங்களிடம் இருந்து பாட்டி மறைந்துவிட்டார். இதனால் எனது குடும்பத்தினருடன் இருக்க வேண்டிய சூழலில் உள்ளேன்.
கடந்த சில ஆண்டுகளாகவே மன ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறேன். அதேபோல் குடும்பத்தை கடந்து வேறு எதுவும் முக்கியமில்லை.
அதனால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதே சரியான முடிவாக கருதுகிறேன். என்னிடம் இன்னும் பல ஆண்டு கால கிரிக்கெட் மீதமிருப்பதால், வரும் காலங்களில் நிச்சயம் விளையாடுவேன்.
இந்த கடினமான சூழலில் எனக்கு ஆதரவாக இருந்த இங்கிலாந்து நிர்வாகம் மற்றும் டெல்லி அணி நிர்வாகம் இரண்டுக்கும் நன்றி கூட கடமைப்பட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
— Harry Brook (@Harry_Brook_88) March 13, 2024
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |