காரைநகர் கடலில் கடற்படை படகுகள் விபத்து; மாயமான கடற்படை வீரர்
யாழ்ப்பாணம் காரைநகர் கடலில் ரோந்து பணிகளில் ஈடுபட்ட கடற்படைக்கு சொந்தமான படகு விபத்துக்கு விபத்துக்குள்ளாகியதில் கடற்படை வீரர் ஒருவர் காணாமல் போய் உள்ளார்.
காரைநகர் கடற்படை முகாமுக்கு சொந்தமான இரண்டு படகுகளில் கடற்படையினர், கடற்படை இறங்கு துறையில் இருந்து 7 கடல் மைல் தொலைவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்குரிய படகு ஒன்றை அவதானித்துள்ளனர்.
அந்த படகை நிறுத்துமாறு கட்டளையிட்ட போதும், அது நிறுத்தாமல் சென்றுள்ளது. இதனையடுத்து கடற்படையின் படகுகள் அதனை பின் தொடர்ந்து சென்ற போதே இரண்டு படகுகளும் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளன.
விபத்து நடந்த போது ஒரு படகுகில் இருந்த கடற்படை வீரர் கடலில் விழுந்து காணாமல் போயுள்ளார். மேலும் இரண்டு பேர் காயமடைந்த நிலையில் ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
காணாமல் போன கடற்படை வீரர் இன்னும் கிடைக்கவில்லை எனவும் தேடுதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது .
