இரணைதீவு கடற்பகுதியில் சிக்கிய இந்திய கடற்றொழிலாளர்கள் : நீதிமன்றின் உத்தரவு
புதிய இணைப்பு
கிளிநொச்சி - இரணைதீவை அண்மித்த கடற்பகுதியில் நேற்று (09) இரண்டு படகுகளுடன் கைதுசெய்யப்பட்ட 14 இந்திய கடற்றொழிலாளர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக இலங்கை கடற்பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்று அதிகாலை கைதுசெய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 14 இந்திய கடற்றொழிலாளர்கள் நேற்று மாலை கிளிநொச்சி கடற்றொழில் பரிசோதகர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதனையடுத்து, நேற்றிரவு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் பதில் நீதிவான் எஸ். சிவபாலசுப்பிரமணியம் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
கிளிநொச்சி (kilinochchi) இரணைதீவுக்கு அண்மித்த கடற்குதியில் இரண்டு படகுகளுடன் 14 இந்திய கடற்றொழிலாளர்கள் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (09-02 -2025) அதிகாலை இரணைதீவிற்கு இந்த சம்பவம் இடம்பெற்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களும் இன்றைய தினம் (09-02-2025) மாலை கிளிநொச்சி மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
குறித்த 14 பேருக்கும் எதிராக வழக்குப்பதிவு செய்து இன்று இரவு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![Gallery](https://cdn.ibcstack.com/article/71fd97d3-e0ec-498c-aa4e-42cb2d67bde9/25-67a8fbff97b90.webp)
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)