நசீர் அஹமட்டின் முட்டுக்கட்டை அரசியல்
முஸ்லிம்களுக்கான தனியான அலகு
முஸ்லிம்களுக்கான தனியான மாவட்டம்
கரையோர மாவட்டம்
கிழக்கிஸ்தான்
இதுபோன்ற அங்குமிங்கும் பேசப்பட்டும், எழுப்பப்பட்டும் வருகின்ற கோரிக்கைகளின் தொடர்ச்சியாக தற்போதைய ஆளுநர் செந்தில் தொண்டமானின் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையாக மாறியிருக்கிறார் சுற்றாடல் அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்.
சில சந்தர்ப்பங்களில் கிஸ்புல்லா போன்றவர்கள் கிழக்கு மாகாணத்தை கைப்பற்ற வேண்டும் எனக் கூறியிருப்பது,
கிழக்கு மாகாணம் முஸ்லிம்களுக்கு சொந்தமான மாகாணம் என்று கூறப்படுவது,
இப்படியான பிரச்சினையின் தொடர்ச்சியாக தற்போது கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக தமிழர் ஒருவர் வந்ததை ஜீரணிக்க முடியாத நசீர் அஹமட், அவரது அன்றாட செயற்பாடுகளுக்கு தடை ஏற்படுத்தும் விதமாக நிறைய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
| செந்தில் தொண்டமானை விமர்சிக்கும் தகுதி நசீர் அஹமட்டிற்கு இல்லை |
பழைய கோரிக்கைகளின் தொடர்ச்சியாக இவை அமைந்து விடுமோ என்ற அச்சம் தமிழ் மக்கள் மத்தியில் எழுப்பப்பட்டு வருகிறது.
ஒரு தமிழர் கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக வருவது என்பது தமிழ் பேசும் சமூகத்திற்கு ஒரு விரும்பத்தக்க விடயமாக இருக்கிறது.
இன விரிசலுக்கான முயற்சி

| வரையறையை மீறும் நசீர் அஹமட் - பல தரப்பும் கண்டனம் |
ஆனால் அதனை சீர்குலைக்கவும் தமிழ் - முஸ்லிம் உறவுகளுக்கு இடையில் விரிசலை ஏற்படுத்தி அதில் குளிர் காய்ந்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் இதற்கான தூபத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.
இது ஒரு அருவருக்கத்தக்க செயலாக தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்தினால் பார்க்கப்பட்டு வருகிறது.
ஒரு அதிகாரி தவறு செய்தால் அதனை தட்டிக் கேட்பதோ சுட்டிக்காட்டுவதோ பிழை இல்லை. ஆனால் அந்த அதிகாரியை முதலில் கடமையை செய்ய விட வேண்டும்.
கடமையை செய்ய விட்டதன் பின்னர் தான் அவர் மீதான விமர்சனங்களை முன் வைக்க வேண்டுமே தவிர, அவர் வந்து செயற்பட ஆரம்பிக்கும் நேரத்தில் அல்ல. அவரது உற்சாகத்தை சீர்குலைக்கும் விதமாக தடைகளை ஏற்படுத்துவது முறையல்ல.
| நசீர் அஹமட் ஒரு பச்சோந்தி ரவூப் ஹக்கிம் பகிரங்கம் |
ஆளுநர்களாக இராணுவ அதிகாரிகளையே பார்த்து பழக்கப்பட்டு வந்த மக்களுக்கு இப்பொழுது சாதாரண சாமானியர்கள் வருவது என்பது வித்தியாசமான அனுபவமாகவே இருக்கிறது.
முதலில் அதற்கான சந்தர்ப்பங்களை வழங்க வேண்டும். பிழைகள் விடப்படும் நேரத்தில் தண்டிக்கலாம் - தட்டிக் கேட்கலாம்.
| கல்வி அமைச்சின் செயலாளரை தூக்குவேன்! மிரட்டும் அமைச்சர் நசீர் அஹமட்(Video) |