செந்தில் தொண்டமானை விமர்சிக்கும் தகுதி நசீர் அஹமட்டிற்கு இல்லை - ரெலோவின் தலைவர் வெளிப்படை
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானையும் அவரது பதவியையும் விமர்சிக்கும் தகுதி சுற்றாடல் அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டிற்கு இல்லையென ரெலோ இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
எனவே ஹாபிஸ் நசீர் அஹமட் கிழக்கு மாகாண ஆளுநர் தொடர்பில் தெரிவித்த கருத்தை மீளப் பெற வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், செந்தில் தொண்டமான் கிழக்கிற்கு ஆளுநராக வந்தமை மகிழ்ச்சிக்குரியது.
கூறிய கருத்தை மீளப்பெற வேண்டும்
செந்தில் தொண்டமான ஒரு ஆளுநர் என்று பார்க்காது அரசாங்கத்தில் இருந்து கொண்டே அவரை ஏளனம் செய்கின்ற அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டிற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
தயவு செய்து இப்படியான கருத்துக்களை பொதுவெளியிலே சொல்லாதீர்கள். உங்களுடைய மரியாதையை நீங்களே காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
நீங்கள் கூறிய கருத்தை மீளப்பெற வேண்டும். இல்லையென்றால், மக்களால் ஏளனம் செய்யப்பட்டு மக்களால் நிராகரிக்கப்படுவீர்கள் என அவர் கூறியுள்ளார்.