சிறைச்சாலை மோதலில் ஏற்பட்ட மரணங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்:நீர்கொழும்பு நீதவான்

Negombo Prisons in Sri Lanka Prison High Court of Sri Lanka
By Sindu Oct 26, 2026 02:32 AM GMT
Report

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் 10 அதிகாரிகளும் கைதிகளும் கொல்லப்பட்ட சம்பவம் ஒரு 'குற்றச் செயல்' என்று நீர்கொழும்பு நீதவான் சிலாணி பெரேரா அறிவித்துள்ளார்.

அந்தவகையில் குறித்த மரணங்கள் சம்பந்தமாக அவசியமான விசாரணைகளை நடத்தி, அதற்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் குறித்த விசாரணை அறிக்கையை எதிர்வரும் 29ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் கட்டளையிட்டுள்ளார்.

காவல்துறையினரின் கட்டளையை மீறிச் சென்ற முச்சக்கரவண்டி மீது துப்பாக்கிச் சூடு

காவல்துறையினரின் கட்டளையை மீறிச் சென்ற முச்சக்கரவண்டி மீது துப்பாக்கிச் சூடு

மரண விசாரணை அறிக்கைகள்

நீர்கொழும்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கைகளைக் பரிசீலித்தும் சாட்சியங்களைக் செவிமடுத்ததை அடுத்து மரண விசாரணை நடவடிக்கைகளை நிறைவு செய்வதாக அறிவித்த நீதிவான் மேற்கண்ட உத்தரவுகளையும் பிறப்பித்தார்.

சிறைச்சாலை மோதலில் ஏற்பட்ட மரணங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்:நீர்கொழும்பு நீதவான் | Negambo Prison Death Investigation

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் இரண்டு பட்டியல்களைக் கொண்ட மரண விசாரணை அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

அதில் முதல் பட்டியல் அதிகாரிகள் தொடர்பானதாகவும் மற்றையது தடுத்து வைக்கப்பட்டவர்கள் தொடர்பானதாகவும் காணப்பட்டது. அப்பட்டியலின்படி, 19 நபர்கள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் உயிரிழந்துள்ளதாகவும், எஞ்சியவர்கள் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டுக் காயமடைந்து உயிரிழந்துள்ளதாகவும் அந்த அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன.

தலை மற்றும் நெஞ்சில் பட்ட துப்பாக்கி சூட்டுக்காயங்கள் மற்றும் வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் கூரிய ஆயுதங்களால் ஏற்படுத்தப்பட்ட அடிகள் காயங்களால் ஏற்பட்ட உள் உறுப்புகளின் அதீதமான இரத்தப்போக்கு ஆகியனவே மரணத்துக்கான காரணங்களாக காணப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மீட்க்கப்பட்ட 40 ஈரானிய மாலுமிகள்! சிறிலங்கா கடற்படையின் விசேட நடவடிக்கை

மீட்க்கப்பட்ட 40 ஈரானிய மாலுமிகள்! சிறிலங்கா கடற்படையின் விசேட நடவடிக்கை

106 சந்தேக நபர்கள்

இதனைத்தொடர்ந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சமர்ப்பித்த மேலுமொரு அறிக்கையில், இதுவரை 81 ஆண்கள் மற்றும் 25 பெண்கள் உட்பட 106 சந்தேகநபர்கள் பெயரிடப்பட்டு அடையாள அணிவகுப்புகளுக்காக முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை மோதலில் ஏற்பட்ட மரணங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்:நீர்கொழும்பு நீதவான் | Negambo Prison Death Investigation

இதனையடுத்து நீதிவான் சி.ஐ.டி அதிகாரிகளிடம் இது குறித்து வினவியபோது, சான்றுப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அறிக்கைகளை விரைவாகப் பெற்றுக்கொள்ள முயற்சிகள் நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமர்ப்பிக்கப்பட்ட கருத்துக்களைப் பரிசீலித்த நீதிவான், 106 சந்தேகநபர்களையும் எதிர்வரும் வியாழக்கிழமை (29) வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். மேலும் அடையாள அணிவகுப்புகளுக்காக முன்னிலைப்படுத்த தேவையில்லாத சந்தேகநபர்கள் அடுத்த விசாரணைத் திகதியில் வாட்ஸ்அப் தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலையாக அனுமதி வழங்கப்பட்டது.

வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது உயிரிழந்த கைதிகளுக்காகச் சட்டத்தரணி பெரேரா முன்னிலையானார். வர்த்தகக் குற்றப் பிரிவின் உதவி காவல் அத்தியட்சகர் சந்தன களுவாரியாய்ச்சி தலைமையிலான குழுவினர் சி.ஐ.டி யின் மேலதிக அறிக்கையைச் சமர்ப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

கொட்டும் மழையிலும் தையிட்டியில் காணி விடுவிப்புக்கான போராட்டம்

கொட்டும் மழையிலும் தையிட்டியில் காணி விடுவிப்புக்கான போராட்டம்

பௌர்ணமி தினத்தில் யாழில் இடம்பெற்ற கைது

பௌர்ணமி தினத்தில் யாழில் இடம்பெற்ற கைது


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026