பௌர்ணமி தினத்தில் யாழில் இடம்பெற்ற கைது
யாழ்ப்பாணம், கொக்குவில் தொடருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள வீடொன்றில், நிலத்திற்குள் சாராய போத்தல்களை புதைத்து வைத்து இரகசியமாக விற்பனை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் யாழ்ப்பாண காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பௌர்ணமி தினமான இன்று (25) ஞாயிற்றுக்கிழமை, யாழ்ப்பாண தலைமை காவல் நிலைய பொறுப்பதிகாரி பாலித செனவிரத்தினவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் குறித்த வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
கிடங்கு வெட்டி மதுபான போத்தல்களை புதைப்பு
இதன்போது, வீட்டின் பின்புறத்தில் கிடங்கு வெட்டி, அதற்குள் மதுபான போத்தல்களை புதைத்து வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதைக்கப்பட்ட போத்தல்களை வெளியே எடுத்து விற்பனை செய்வதற்காக கிடங்கில் சிறிய துளையொன்றும் அமைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சோதனையின்போது 187.5 மில்லிலீற்றர் கொள்ளளவுடைய 45 சாராய போத்தல்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபரை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |