பூஸாவுக்கு மாற்றப்பட்ட கைதி உயிரிழப்பு - வெளியான காரணம்
பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து மாற்றப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த கைதி உயிரிழந்துள்ளார்.
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக குறித்த கைதி உயிரிழந்ததாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
மரணத்திற்கான காரணம்
கைதியின் மரணத்திற்கான காரணம் குறித்த மேலதிக விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

மேலும், நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த 1,033 கைதிகள் பல்வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அத்துடன் மோதலை வழிநடத்தியதாகக் கூறப்படும் கட்டுவெல்லேகம சுரேஷும் பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளதுடன், அவர்களில் 7 சிறைசாலை அதிகரிகள் உயிரிழந்துள்ளார்கள்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |