மு.க. ஸ்டாலினுக்கும் ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் பேச்சுவார்த்தை - முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்

M K Stalin Chennai Jeevan Thondaman
By Sathangani Jul 29, 2023 10:07 AM GMT
Report

மலையக தமிழர்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில் அவர்களை கௌரவிக்கும் முகமாக மலையகம் - 200 விழா, இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினை, மலையக கல்வி அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இல்லத்தில் மரியாதை நிமித்தம் இன்று (29.07.2023) காலை நடைபெற்ற இச்சந்திப்பில், இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழ் மக்களின் மேம்பாட்டுக்காக தமிழக அரசின் பங்களிப்பும் அவசியம் என்ற கோரிக்கையை அமைச்சர் ஜீவன் தொண்டமான் முன்வைத்தார்.

சுமுகமான தீர்வு

மு.க. ஸ்டாலினுக்கும் ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் பேச்சுவார்த்தை - முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் | Negotiation Between M K Stalin Jeeevan Thondaman

இச்சந்தர்ப்பத்தில், கடந்த வருடம் இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியின் போது தமிழக அரசாங்கம் இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் பாரிய அரிசி தொகையினை நன்கொடையாக வழங்கியிருந்தது. இதற்கு இலங்கை மக்கள் சார்பாக தனது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இந்த சந்திப்பின் போது, சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தின் துணைத் தூதர் டொக்டர் வெங்கடேஸ்வரன் மற்றும் அரச உயர் அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர்.

இது தொடர்பாக அமைச்சரின் ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களாக,

இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் இரு நாட்டு மீனவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் சுமூகமான தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு என முதல்வரிடம் குறிப்பிட்ட ஜீவன் தொண்டமான், இவ்விவகாரம் சம்பந்தமாக சிறிலங்கா அமைச்சரவையிலும் பேசவுள்ளதாக அவரிடம் தெரிவித்துள்ளார்.

200 வருடங்கள்

மு.க. ஸ்டாலினுக்கும் ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் பேச்சுவார்த்தை - முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் | Negotiation Between M K Stalin Jeeevan Thondaman

மலையக கல்வி அபிவிருத்தி சம்பந்தமாக தமிழக அரசிடம் 4 கோரிக்கைகளை ஜீவன் தொண்டமான் முன்வைத்தார். அத்துடன்  மலையக மாணவர்களுக்கு தமிழகத்திலும் பட்டப்படிப்பை நிறைவுசெய்வதற்கான புலமைப்பரிசில் திட்டங்கள் பற்றியும் இதன்போது கலந்துரையாடியுள்ளார்.

மலையக தமிழர்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அம்மக்கள் இலங்கையின் பொருளாதாரத்துக்கு வழங்கிய – வழங்கி வரும் பங்களிப்பை பாராட்டும் வகையில் அவர்களின் கலை, கலாசார பண்பாட்டு விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையிலான மலையகம் - 200 விழா அரச அனுசரணையுடன் எதிர்வரும் நவம்பரில் நடைபெறவுள்ளமை பற்றியும் தமிழக முதல்வருக்கு, ஜீவன் தொண்டமான் தெளிவுபடுத்தினார்.

மேலும், கலைஞர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு பல உதவி திட்டங்கள் வழங்கப்பட்டது. அதையும் நினைவுகூர்ந்த அமைச்சர் ஜீவன் தொண்டமான் தொடர்ந்தும் தி.மு.க அரசு முன்னெடுக்கும் திட்டங்களுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஒத்துழைப்பு வழங்கும் எனவும் தெரிவித்தார்.


Gallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025