பிரித்தானியாவில் அதிகரிக்கும் நிகர இடம்பெயர்வு!
தேசிய புள்ளியியல் அலுவலகம் (ONS) பிரித்தானியாவின் நிகர இடம்பெயர்வு ஒரு புதிய சாதனையை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.
அவ்வகையில், திருத்தப்பட்ட புள்ளிவிவரங்களின் படி, டிசம்பர் 2022 வரையிலான ஆண்டில், நிகர இடம்பெயர்வு 745,000 ஐ எட்டியதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் மதிப்பிடப்பட்டுள்ளது.
நிகர இடம்பெயர்வு என்பது இங்கிலாந்திற்கு வரும் நபர்களின் எண்ணிக்கைக்கும், வெளியேறும் எண்ணிக்கைக்கும் உள்ள வித்தியாசம் ஆகும்.
மக்கள் தொகை
நிகர இடம்பெயர்வு அதிகரிப்பு 1962 முதல் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் மக்கள் தொகையில் மிகப்பெரிய வருடாந்திர அதிகரிப்புக்கு பங்களித்தது எனலாம்.
தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் தரவுகளின்(ONS)படி,
“டிசம்பர் 2022 வரையிலான காலப்பகுதியில் ஆண்டிற்கான முந்தைய மதிப்பீடு 606,000 ஆக இருந்தது.
ஜூன் 2023 இல், பிரித்தானியாவின் நிகர இடம்பெயர்வு 672,000 ஆக இருந்தது, முந்தைய 12 மாதங்களில் 607,000 ஆக இருந்ததாக புதிய புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன.
மக்கள் தொகை 578,000 உயர்ந்ததோடு, 2022 ஆம் ஆண்டின் மத்தியில் 60.2 மில்லியனாக காணப்பட்டது.
ரிஷி சுனக் மீதான அழுத்தம்
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியிலிருந்து 1.4 மில்லியன் புலம்பெயர்ந்தோருக்கு, கல்வி, வேலைவாய்ப்பு, மோதல் அல்லது ஓடுக்குமுறையிலிருந்து தப்பிக்க என பல காரணங்களுக்காக, விசா வழங்கப்பட்டதால் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவ்வாறு புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை, 508,000 பேர்.” என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புள்ளிவிபரங்கள், தொழிலாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க தீவிரமான புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்த ரிஷி சுனக் மீது அழுத்தத்தை தீவிரப்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |