காவல்துறை உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த நபர்
யாழ் - மருதங்கேணி நித்தியவெட்டை பகுதியில் காவல்துறை உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிளுக்கு நபர் ஒருவர் தீ வைத்துள்ளார்.
மதுபோதையில் வந்த நபரே இவ்வாறு நடந்து கொண்டதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விசாரணை
நித்தியவெட்டை பகுதிக்கு கடமை நிமித்தம் தனது மோட்டார் சைக்கிளில் சென்று மோட்டார் சைக்கிளை வீதியில் நிறுத்தி விட்டு, வீடொன்றில் விசாரணை நடவடிக்கையை மேற்கொண்டபோது, வீதியில் நின்ற மோட்டார் சைக்கிளுக்கு மதுபோதையில் வந்த நபர் தீ வைக்க முற்பட்டுள்ளார்.
இதனை காவல்துறை உத்தியோகத்தர் அவதானித்ததும் குறித்த நபர் தப்பிச் சென்றுள்ளார்.
விரைந்து சென்ற காவல்துறை உத்தியோகத்தர் தீயை அணைத்துள்ளார்.
சிறிலங்கா இராணுவத்தில் இருந்தவர்களுக்கு ஏற்பட்ட நிலை! மறுக்கப்படும் நுழைவு விசா: பொங்கியெழும் சரத் வீரசேகர
இதன்போது மோட்டார் சைக்கிளின் இயந்திரப் பகுதி சிறிதளவு சேதமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மருதங்கேணி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.