உலக வெளிநடப்புக்கு மத்தியில் ஐ.நா வில் உரையாற்றிய நெதன்யாகு
காஸா போர் மற்றும் அண்டை நாடுகள் மீதான இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் வகையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தனது கருத்துகளை முன்வைத்துள்ளார்.
அவர் உரையாற்றுவதற்கு முன்னதாகவே பல நாடுகளின் பிரதிநிதிகள் பொதுச் சபை மண்டபத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
இது காஸா போர் தொடர்பில் இஸ்ரேலுக்கு எதிராக நிலவும் சர்வதேச விமர்சனத்தை வெளிப்படுத்துவதாகப் பார்க்கப்பட்டது.
குற்றச்சாட்டை நிராகரித்த நெதன்யாகு
காஸாவில் இஸ்ரேல் இனப்படுகொலை மேற்கொள்கிறது என்ற குற்றச்சாட்டை நிராகரித்த நெதன்யாகு, இஸ்ரேலின் நடவடிக்கைகள் அதற்கு முற்றிலும் எதிரானவை எனக் கூறியுள்ளார்.

அதேவேளை, காஸாவில் பெருமளவிலான உயிரிழப்புகள் மற்றும் அழிவுகள் ஏற்பட்டுள்ள நிலையில் அவரது கருத்துகள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளன.
மேற்குக் கரையில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு சட்டவிரோதமானது என மேற்கத்திய நாடுகள் முன்வைக்கும் குற்றச்சாட்டையும் நெதன்யாகு நிராகரித்தார்.
இதற்கு வரலாற்றில் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் கட்டுப்பாட்டில் இருந்த காலனித்துவப் பகுதிகளை அவர் ஒப்பிட்டுக் குறிப்பிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |