காலை வாரியது கூட்டணி கட்சி : நெதன்யாகு ஆட்சியிலிருந்து வெளியேறுவது உறுதி
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நீண்டகால கூட்டணி கட்சியான மரபுவாத யூதக் கட்சி ஒன்று அவர் பிரதமராகத் தொடர்வதற்கு ஆதரவு அளிக்கவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் நெதன்யாகு அடுத்த முறையும் பிரதமராகும் எண்ணம் கலைந்து போயுள்ளது.
ஜனாதிபதி ஹெர்சாக் புதிய ஆட்சி அமைப்பது குறித்து வெற்றி பெற்ற கட்சிகளுடன் இரண்டாவது நாளாக ஆலோசனை மேற்கொண்டார்.
ஆதரவளிக்க மறுத்த கூட்டணி கட்சி
இந்தச் சந்திப்பில், நெதன்யாகுவுக்கு கடந்த 5 ஆண்டுகளாக ஆதரவளித்து வந்த யுனைடெட் தோரா ஜுடாயிஸம் எனும் கட்சி இம்முறை அவர் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

இருப்பினும், 7 இடங்களைக் கைப்பற்றியுள்ள அந்தக் கட்சி அவரை எதிர்த்து போட்டியிட்ட ஐசென்கோட்டிற்கும் இதுவரை ஆதரவளிக்கவில்லை.
மரபுவாத யூதர்களின் ஆதரவைப் பெற்ற அக்கட்சி மதப்பற்றுள்ள யூத மாணவர்களுக்கு இராணுவப்பணிக் கட்டாயமாக்கப்பட்டதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
ஐசென்கோட் பிரதமராகப் பதவியேற்கக் கூடும்
புதிய ஆட்சி அமைக்க 28 நாள்கள் அவகாசம் வழங்கப்படும் சூழலில், மரபுவாத யூதக் கட்சி அல்லது அரபு கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஐசென்கோட் பிரதமராகப் பதவியேற்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரேலில், நெதன்யாகு அரசு குறித்து மக்களிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவி வருவதால், ஐசென்கோட்டிற்கு ஆதரவளிக்க கட்சிகள் முன்வரக் கூடும் எனக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |