மீண்டும் பதற்றம்..! போருக்குத் திரும்பத் தயார் ...! இஸ்ரேல் பிரதமரின் புதிய அறிவிப்பு
இஸ்ரேல் எந்த நேரத்திலும் போருக்குத் திரும்பத் தயாராக இருப்பதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் எச்சரித்துள்ளார்.
தொலைக்காட்சியில் இன்று வியாழக்கிழமை விசேட உரையாற்றிய போதே இவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஆறு வாரங்களுக்கு மேலான போரின் மூலம் இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் ஆட்சியின் “அடித்தளங்களை குலைத்துவிட்டன” என்று இஸ்ரேல் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
ற்காலிக போர் நிறுத்தம்
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான “இரண்டு வார கால தற்காலிக போர் நிறுத்தம்” “இஸ்ரேலுடன் முழுமையான ஒருங்கிணைப்புடன்” மேற்கொள்ளப்பட்டது என்றும் பிரதமர் வலியுறுத்தி இருந்தார்.

இதேவேளை, இஸ்ரேலின் பிரதான எதிர்க்கட்சித் தலைவரான யாயிர் லாபிட், ,போர் நிறுத்தத்தை இஸ்ரேலுக்கு ஒரு "இராஜதந்திரப் பேரழிவு" என்று வர்ணித்ததோடு, நாட்டின் இலக்குகளை அடைவதில் நெதன்யாகு தோல்வியடைந்து விட்டதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |