பற்றி எரியும் ஈரான் தலைநகர்..! பாதைகளை திறக்கும் அரசு : வெளியேறும் மக்கள்
புதிய இணைப்பு
தரை வழியாக எல்லை கடக்கும் அனைத்து வழிகளையும் திறக்க ஈரானிய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இதன்மூலம் ஈரானில் வசிக்கும் வெளிநாட்டினர் நாட்டை விட்டு வெளியேற முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
தெஹ்ராளை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் பாதுகாப்பு படை குடியிருப்பாளர்களை எச்சரித்த பின்னர், அப்பகுதியில் தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
ஈரான் ஆன்மீக தலைவர் அயதுல்லா அலி கமேனியை (Ali Khamenei) கொல்வது மட்டுமே இரு நாடுகளுக்கிடையேயான மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Nethanyahu) தெரிவித்துள்ளார்
சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் ஆன்மீக தலைவரை கொலை செய்தால் மோதல் மேலும் தீவிரமடையும் என்ற கரிசனை காரணமாக இந்த யோசனையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிராகரித்துள்ளார் என ஊடகங்களில் வெளியான தகவல்கள் குறித்து கேள்வி எழுப்பியவேளை அவரை கொலை செய்வது மோதலை மேலும் தீவிரப்படுத்தாது முடிவிற்கு கொண்டுவரும் என குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் அணு ஆயுத முயற்சி உலகிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதே இஸ்ரேலின் நோக்கமே தவிர மோதலை அதிகரிப்பது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 6ஆம் நாள் மாலை திருவிழா
