பலஸ்தீனத்தை அங்கீகரித்த நாடுகளுக்கு நெதன்யாகுவின் அதிரடி எச்சரிக்கை
பலஸ்தீனத்தை (Palestine) அங்கீகரித்த நாடுகளுக்கு இஸ்ரேல் (Israel) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் பலத்தீனத்தை அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளன.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அக்டோபர் ஏழு கொடூர படுகொலைக்குப் பிறகு பலத்தீன அரசை அங்கீகரிக்கும் தலைவர்களுக்கு என்னிடம் ஒரு தெளிவான செய்தி உள்ளது.
பலத்தீன நாடு
நீங்கள் பயங்கரவாதத்துக்கு மிகப்பெரிய பரிசை வழங்குகிறீர்கள்.
உங்களுக்கு என்னிடம் இன்னொரு செய்தியும் உள்ளது அது நடக்காது.
ஜோர்டான் நதிக்கு மேற்கே பலத்தீன நாடு உருவாகாது.
பல ஆண்டு
பல ஆண்டுகளாக உள்நாட்டிலிருந்தும் மற்றும் வெளிநாட்டிலிருந்தும் பெரும் அழுத்தத்தை எதிர்கொண்டு இந்த பயங்கரவாத நாடு உருவாவதை நான் தடுத்துள்ளேன்.
நாங்கள் அதை உறுதியுடன் செய்தோம், அரசியல் ஞானத்துடன் செய்தோம், மேற்குகரையில் யூத குடியேற்றத்தை இரட்டிப்பாக்கினோம், அதை தொடர்வோம்.
நம் நாட்டின் மையப்பகுதியில் ஒரு பயங்கரவாத அரசை நம் மீது திணிக்கும் சமீபத்திய முயற்சிக்கான பதில், நான் அமெரிக்காவிலிருந்து திரும்பிய பிறகு கொடுக்கப்படும், காத்திருங்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
