ஈரானில் ஆட்சியை வீழ்த்துவதற்கு நெதன்யாகு இட்ட உத்தரவு
இஸ்ரேலியத் தேர்தலில் தான் மீண்டும் வெற்றிப் பெற்றால், அமெரிக்கா உடன் இணைந்து ஈரானுக்கு எதிரான போர் தொடரும் என அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமிகு நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த ஆட்சியை (ஈரான்) வீழ்த்துவதற்கு, நான் ஏற்கனவே மொசாட் மற்றும் இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளேன், எனவே இந்த அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான ஒரே வழி அதுதான்.” என தெரிவித்தார்.
முன் ஒருபோதும் இருந்திராத ஒரு நட்புறவு
தேர்தல் பிரசாரத்தில் இதுதொடர்பாக பேசிய நெதன்யாகு., “ஒரு இஸ்ரேலியப் பிரதமருக்கும், ஒரு அமெரிக்க ஜனாதிபதிக்கும் இடையில் இதற்கு முன் ஒருபோதும் இருந்திராத ஒரு நட்புறவுடன் டொனால்ட் ட்ரம்ப் வந்துள்ளார். இவ்வளவு நட்பான ஒரு ஜனாதிபதியை நாம் மீண்டும் பெறுவோமா என்பது சந்தேகமே.

அவருக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன. எனக்கு வாக்களிக்குமாறு அவர் உங்களைக் கேட்டுக்கொள்கிறார் என்றார்.
ட்ரம்ப் விடுத்த கோரிக்கை
முன்னதாக தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில், “பிரதமராக நெதன்யாகுவுக்கு வாக்களியுங்கள், நாம் தொடங்கிய வேலையை முடித்தாக வேண்டும்” என ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த 2023ம் ஆண்டு, ஒக்டோபர் 7ம் திகதி இஸ்ரேல்மீது ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலில் இன்று முதல் பொதுத்தேர்தல் நடைபெற்றது.
இஸ்ரேலின் நீண்டகால பிரதமரான பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராக, முன்னாள் இராணுவத் தளபதி காடி ஐசன்கோட் தலைமையிலான 'யஷார்' கட்சி பலத்த சவாலை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் நாடாளுமன்றமான நெசட்டில் உள்ள 120 இடங்களில், ஆட்சி அமைக்க 61 இடங்கள் தேவை. ஆனால் இந்த இரண்டு கட்சிகளுக்குமே பெரும்பான்மை கிடைக்காது எனக் கூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |