சீனன்குடா IOC எண்ணெய் சேமிப்பு நிலையத்திற்கு நெதர்லாந்து தூதுவர் விஜயம்
By Pavi
இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் வைபே டி போயர் (Wiebe de Boer) திருகோணமலை சீனக்குடாவில் அமைந்துள்ள லங்கா IOC எண்ணெய் சேமிப்பு நிலையத்துக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்திற்கான விஜயத்தின் மூன்றாம் நாளான இன்று(03.09.2026) சிவில் சமூக பிரதிநிதிகளுடனும் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது, பிரதேச மக்களின் சமூக நிலைமைகள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் அவர் கேட்டறிந்தார்.
லங்கா IOC எண்ணெய் சேமிப்பு நிலையம்
பின்னர் மட்டக்களப்புக்கு சென்ற தூதுவர், மட்டக்களப்பு மாவட்ட செயலாளருடன் கலந்துலைரயாடலில் ஈடுபட்டுள்ளார்.

தொடர்ந்து மட்டக்களப்பு Burgher Cultural Union பிரதிநிதிகளையும் சந்தித்தார்.
மேலும், 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் இலக்காகிய மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்கும் அவர் விஜயம் செய்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி