புளியங்கொட்டை தொண்டையில் சிக்கி 7 வயது சிறுமி உயிரிழப்பு
கண்டி, கலஹா, நில்லம்ப குருகலே பகுதியில் புளியங்கொட்டை தொண்டையில் சிக்கியதில் 7 வயது சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அப்பகுதியைச் சேர்ந்த சனுதி லக்ஷானி என்ற சிறுமி எனவும், குடும்பத்தின் இளைய பிள்ளை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (02.09.2026) பிற்பகல் தனது சகோதரிகளுடன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி, பெற்றோருக்குத் தெரியாமல் சமையலறையில் இருந்த புளியை எடுத்து சாப்பிட முயன்றுள்ளார்.
சிறுமி ஒருவர் பலி
இதன்போது புளியங்கொட்டை ஒன்று அவரது தொண்டையில் சிக்கியதால், சிறுமி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அறிந்த தாயார் உள்ளிட்ட உறவினர்கள், சிறுமியை காப்பாற்றுவதற்காக லொறி ஒன்றில் பேராதனை போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
எனினும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சிறுமி உயிரிழந்துள்ளார்.
சிறுமியின் சடலம் தற்போது பேராதனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலஹா காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |