யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு மோட்டார் குண்டுகள்
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Kajinthan
யாழ்ப்பாணம் மண்கும்பான் பகுதியில் இருந்து 60 மில்லிமீட்டர் மோட்டார் குண்டுகள் இரண்டு கண்டெடுக்கப்பட்டன.
குறித்த மோட்டார் குண்டுகள் நேற்றையதினம் (02.09.2026) காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
மண்கும்பான் ஜும்மா பள்ளிவாசலுக்கு அண்மையில் உள்ள கிணறு ஒன்றில் மேற்படி
மோட்டார் குண்டுகள் இருப்பதாக ஊர்காவற்துறை காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
மோட்டார் குண்டு
இதனையடத்து இந்த விடயம் ஊர்காவற்துறை காவல்துறையினரால் காவல்துறை விசேட அதிரடிப் படையினரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

அதன்படி அங்கு வந்த காவல்துறை விசேட அதிரடிப் படையினர் அவற்றை மீட்டு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி