ஒரு போதும் சாத்தியமில்லை -அடித்து கூறுகிறது ஜே.வி.பி
சிறிலங்காபொதுஜனபெரமுனவும், ஐக்கிய தேசியக் கட்சியும் தேசிய மட்டத்தில் கூட்டணிகளை அமைத்தாலும் கீழ் மட்டத்தில் அது சாத்தியமில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் அரசியற்பீட உறுப்பினர் லால்காந்தா தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் நாவலப்பிட்டிய கரஹதுன்கல பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
69 இலட்சம் வாக்குகளை இழந்த மொட்டு

இந்நாட்டில் 69 இலட்சம் மக்களின் வாக்குகளைப் பெற்றிருந்த சிறிலங்கா பொதுஜன பெரமுன ஐக்கிய தேசியக் கட்சியோடு கூட்டணி அமைக்க தீர்மானித்திருப்பது தங்களுக்கிருந்த 69 இலட்சம் வாக்குகள் இல்லாமல் போயுள்ளதை புரிந்துகொண்டதாலேயே எனவும் கூறினார்.
தேர்தல் நடத்தப்படுமென கூறினாலும் எப்போது தேர்தல் நடத்தப்படுமென சரியாக கூற முடியாது.
தொழிற்சங்க நடவடிக்கை

இந்நாட்டில் அதிக
சம்பளத்தைப் பெறும் அரச
துறையின் உயர் அதிகாரிகள்
அனைவரும் ஒன்றிணைந்து
தொழிற்சங்க நடவடிக்கையை
மேற்கொள்ள கலந்துரையாடி
வருகிறார்கள். அந்த
தொழிற்சங்க நடவடிக்கை
முன்னெடுக்கப்பட்டால் நாட்டு
மக்களுக்கு அதனால் பெரும்
பாதிப்பு ஏற்படும் எனவும்
கூறினார்.