ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான புதிய கூட்டணி ஜனவரியில் உதயம்!
அடுத்த ஆண்டு (2024) தேர்தல் ஆண்டு என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமது பரந்துபட்ட அரசியல் கூட்டணியை ஜனவரி மாதமளவில் வெளிப்படுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டுக்கான தேர்தல் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவாறு கூறியிருந்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
"ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில் 20 அரசியல் கட்சிகளும் சிவில் மற்றும் வெகுஜன அமைப்புகளும் அங்கம் வகிக்கவுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கையை ஏற்கும் தரப்புகள் மாத்திரமே கூட்டணியில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளன." என அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு (2024) அதிபர் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல்கள் நடத்தப்படும் என்று அதிபர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பில் காண்க.
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்