FIFA உலகக் கிண்ண தொடரிலிருந்து வெளியேறிய ஜெர்மன் - அதிர்ச்சியில் இரசிகர்கள்
4 முறை கால்பந்து உலகக் கிண்ணத்தை வென்ற ஜெர்மனி அணி, உலகக் கிண்ண கால்பந்து தொடரில் இருந்து வெளியேறியமை அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கால்பந்து தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஒன்றில் ஜெர்மனி மற்றும் பராகுவே அணிகள் விளையாடின.
பராகுவே அணி முன்னிலை
அமெரிக்காவின் போஸ்டன் மைதானத்தில் நடந்த இந்த போட்டியின் 42-வது நிமிடத்தில் பராகுவே அணி வீரர் ஜூலியோ என்சிசோ முதல் கோலை போட்டார். அதன்பின்னர், கோல் எதுவும் விழவில்லை.

இதனால், முதல் பாதி முடிவில் 1-0 என்ற புள்ளி கணக்கில் பராகுவே அணி முன்னிலையில் இருந்தது.
இதன்பின்பு இரண்டாவது பாதி ஆட்டம் தொடர்ந்தது. 54-வது நிமிடத்தில் ஜெர்மனியின் கை ஹாவெர்ட்ஜ் ஒரு கோலை போட்டார். இதனால் போட்டி 1-1 என சமனானது.
இதன்பின்னர் போட்டி முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்க முயற்சித்தும்.பலனில்லை. இதனால், 90 நிமிடங்களுக்கு பின்னர் கூடுதல் நேரம் அளிக்கப்பட்டது
ஆனால் அதிலும் 30 நிமிடங்கள் வரை கோல் அடிக்கப்படவில்லை. பின்னர் கிடைத்த 3 நிமிடங்களிலும் கோல் விழவில்லை.
பெனால்டி ஷூட்அவுட் முறை
இதனால், பெனால்டி ஷூட்அவுட் முறையில் ஆட்டம் தொடர்ந்தது. இதில், ஜெர்மனிக்கு முதலில் கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைக்கப்பெற்து எனினும், முதல் கோலை அடிக்க அது தவறியது. ஆனால், பராகுவே முதல் வாய்ப்பை கோலாக மாற்றியது.

இதுபோன்று மொத்தம் 6 முறை கோல் அடிக்க கிடைத்த வாய்ப்பில், ஜெர்மனி 3 முறையும், பராகுவே 4 முறையும் கோல் அடித்தன.
இதனால், பெனால்டி ஷூட்அவுட்டில் 3-4 என்ற புள்ளி கணக்கில், பலம் வாய்ந்த ஜெர்மனியை, பராகுவே வீழ்த்தியது
இதனை அடுத்து, ஜெர்மனி அணி, பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இருந்து வெளியேறி உள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |