மின் துண்டிப்பு தொடர்பில் புதிய அறிவிப்பு! விபரங்கள் வெளியானது
Srilanka
night
Power cut
weekends
Electricity Board
By MKkamshan
வார இறுதி நாட்களில் இரவு வேளையில் மின்சார விநியோக தடையை மேற்கொள்ள வேண்டாம் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
இதன்படி, பகல் வேளையில் மாத்திரம் மின் விநியோக தடையை ஏற்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நாளைய தினம் (26) A,B மற்றும் C ஆகிய பிரிவுகளுக்கு 3 மணிநேர மின் வெட்டையும், ஏனைய பிரிவுகளுக்கு 2.30 மணிநேர மின் வெட்டையும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஏனைய வலயங்களுக்கு உட்பட்ட இடங்களில், 2 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

