அஸ்கிரிய பீடத்திற்கு புதிய அனுநாயக்கர் தெரிவு
Kandy
Sri Lanka
Asgiriya Chapter
By Raghav
அஸ்கிரிய பீடத்தின் புதிய அனுநாயக்கராக, அஸ்கிரிய பீடத்தின் பிரதிப் பதிவாளர் நாரம்பனாவே ஆனந்த தேரர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டதை அடுத்து, புதிய தெரிவுக்கான தேர்தல் இன்று (28.08.2025) கண்டியில் உள்ள அஸ்கிரிய மகா விகாரையில் இடம்பெற்றது.
அஸ்கிரிய பீடம்
அஸ்கிரிய பீடத்தின் தலைமை பீடாதிபதி வரகாகொட சிறி ஞானரத்ன தேரரின் தலைமையில் இந்தத் தேர்தல் நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் அஸ்கிரிய கரக மகா சங்க சபையின் மொத்தம் 19 உறுப்பினர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.
கடந்த ஜூன் 20 ஆம் திகதி தனது 67 வயதில் காலமான ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரரின் மறைவைத் தொடர்ந்து இந்தப் பதவி வெற்றிடமாகியிருந்தமை குறிப்பிடத்தக்து.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி