கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுவப்படும் புதிய அமைப்பு
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு சேவைமையங்கள்(கவுண்டர்) அடையாளம் காணும் கமரக்களை நிறுவ பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு முடிவு செய்துள்ளது.
தற்போது 8 சேவைமையங்களில் மட்டுமே பாதுகாப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் கீழ், காவல்துறையின் தலையீட்டின் மூலம் 30 குடிவரவு மற்றும் குடியகல்வு சேவைமையங்களில் பாதுகாப்பு கமராங்கள் நிறுவப்பட உள்ளன.
குற்றவாளிகளை இனங்காணுதல்
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள், பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போதும், வெளிநாட்டிலிருந்து வரும்போதும் அவர்களை அடையாளம் காண முடியும்.

இந்த கமரா அமைப்பிலிருந்து வரும் காட்சிகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை 9 மணி நேரம் முன்
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்