பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக அலி சப்ரியின் சகோதரர் நியமனம்!!
Ceylon Petroleum Corporation
Ali Sabry
Sri Lanka Economic Crisis
Sri Lankan political crisis
By Kanna
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவராக உவைஸ் மொஹமட் நியமிக்கப்பட்டுள்ளார்.
மொஹமட் உவைஸ் முன்னாள் நீதி அமைச்சரும் நிதி அமைச்சருமான மொஹமட் அலி சப்ரியின் சகோதரரும் ஆவார்.
உவைஸ் மொஹமட் இதற்கு முன்னர் இலங்கை பெட்ரோலிய களஞ்சிய முனையத்தின் தலைவராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்தோடு உவைஸ் இன்று பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.
தனிப்பட்ட விடயம் காரணமாக பதவி விலகல்
முன்னர் தலைவராக பணியாற்றி வந்த சுமித் விஜேசிங்க, தனிப்பட்ட விடயம் காரணமாக தமது பதவி விலகல் கடிதத்தை விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு அனுப்பி வைத்திருந்த நிலையில், குறித்த பதவி வெற்றிடத்திற்கு உவைஸ் மொஹமட் நியமிக்கப்பட்டுள்ளார்.
சுமித் விஜேசிங்க

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி